News Update :

Tuesday, 30 October 2012

திருமதிபாக்கியலட்சுமி கந்தையா



இறப்பு  2012-10-29


மண்கும்பான் கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியலட்சுமி நேற்று (29.10.2012) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் இராசம்மா தம்பதியரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான முத்தர் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், கந்தையாவின் அன்பு மனைவியும், றஜனி, பவானி ஆகியோரின் அன்புத் தாயும், ஜெயம், பஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியும், மயூசாந் (சுவிஸ்), சிந்துயா, சீனுசாந், சாமினி, சாமந்தி, சரண்ஜா, பஸ்மியா, திபிசங்கர், விஸ்ணுகாந் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, சுந்தரலட்சுமி, தர்மலிங்கம், இராசலட்சுமி மற்றும் காமாட்சி ஆகியோரின் சகோதரியும், சுந்தரலட்சுமி, காலஞ்சென்ற காசிப்பிள்ளை மற்றும் சடாசிவம், கந்தையா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.10.2012) செவ்வாய்க்கிழமை பி.ப. ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.




தகவல் : மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். - வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். ,

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.