அன்னார் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கலாநிதி செல்லையா திருநாவுக்கரவு-திருமதி சன்முகதாசன் மங்கையற்கரசி-திருமதி உதயா பாலன்-அல்லையூர் இணையத்தின் இயக்குனர் செல்லையா சிவா ஆகியோரின் பாசமிகு ஆசையம்மா ஆவார்
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், இல.20, பிரப்பங்குளம் வீதி, வண்ணார் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லையா கமலாம்பிகை அவர்கள் (20.10.2012) சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதர் தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி (வெள்ளையர்) மருதடியாள் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையாவின் அன்பு மனைவியும், மங்களநாயகி, சுந்தரநாயகி, நாகரத்தினம் (முன்னாள் ஊழியர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மதியாபரணம் (முன்னாள் ஊழியர் ப.நோ.கூ.சங்கம், வேலணை), மகாதேவா (வர்த்தகர்), புவிமலர்தேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான யோகம்மா, முத்துலட்சுமி, இரத்தினவிநாயகர், இராசசேகரம், பாலகணபதி, பரஞ்சோதி மற்றும் படிகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் (22.10.2012) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
No comments:
Post a Comment